யாரெல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதுனு தெரியுமா?
கிழங்குவகையில் உருளைக்கிழங்கும் ஒன்றாகும். உருளைக்கிழங்கில் அதிகமாக கார்போஹைட்ரேட் சத்து நிறைந்துள்ளது.
இந்த கிழங்கை அனைத்து மக்களும் வெவ்வேறு வகைகளில் சமைத்து உண்பார்கள். இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன.
என்னதான் இந்த கிழங்கில் சத்துக்கள் இருந்தாலும் இதை குறிப்பிட்ட சிலர் சாப்பிடக் கூடாது. யார் யார் இந்த கிழங்கை சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை உண்பதால் உடலில் எந்த ஒரு நோயும் ஏற்படாது, ஆனால் சில நோய் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை உண்ண கூடாது.
உருளைக்கிழங்கு உடலில் மாச்சத்தை அதிகரிக்க செய்யும். இதனால் நீரழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை குறைவான அளவில் உண்ண வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த கிழங்கில் ஒரு வகையான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு டிரைகிளசரைட்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கொழுப்பு உடலுக்கு நன்மைகளை தந்தாலும் சக்கரையின் அளவை கூட்டும்.
இதில் இருக்கும் காபோஹைட்ரேற்றுக்கள் கீழ்வாத நோயாளருக்கு கெடுதலை உண்டாக்கும். கீழ்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது.
இதை அதிகமாக சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தையும் அதிகரித்துவிடும். இதன் காரணமாகத்தான் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் இந்த உருளைக்கிழகை நாட கூடாது.
எனவே சர்க்கரை, கீழ்வாதம் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் இந்த கிழங்கினை தவிர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |