உருளைக்கிழங்கை இப்படி சமைத்து பாருங்க.. வாழ்நாளில் இதன் சுவை மறக்காது
பொதுவாக பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு, இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது.
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம், இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
இதனை வைத்து சுவையான ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்,
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 4
மிளகாய் பொடி- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி- அரை டேபிள் ஸ்பூன்
மிளகுப்பொடி- அரை டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி- கால் டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு, உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு நன்றாக கழுவிவிட்டு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும், நன்றாக வெந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும் கடுகு சேர்த்து தாளிக்கவும், இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கிளறவும்.
மசாலா வாசனை போன பின்னர், மிளகுப்பொடி சேர்த்து கடைசியாக கிளறிவிடவும், மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்னர் கடைசியில் கொத்தமல்லி இழை தூவி பரிமாறலாம்.