இனி உருளைக்கிழங்கினால் வீடு கட்டலாம்!
சாதாரணமாக ஒரு வீட்டைக் கட்டுவதற்கு சீமெந்து, கல், மண் என்பவற்றை பயன்படுத்துவோம். ஆனால், உருளைக்கிழங்கினாலும் வீடு கட்ட முடியும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிதான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் என்ற உருளைக்கிழங்கை பயன்படுத்தி வீடு கட்டமுடியும் என தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, விண்வெளித் தூசு, உப்பு போன்ற பொருட்களை ஒன்றிணைத்து கலவையொன்று செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலவையினால் வீடு கட்டமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கலவையானது 32 மெகா பொஸ்கல்ஸ் என்ற அளவைக் கொண்ட வலிமையுடன் இருப்பதாக குறித்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
எனவே இனி செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கை வைத்தே வீடு கட்டிவிடலாம்.