மொறு மொறுப்பான Potato Garlic Rings வீட்டில் செய்வது எப்படி?
பொதுவாக நாம் மாலை நேரங்களில் மொறு மொறுவென இருக்கும் சிற்றுண்டிகளை தான் சாப்பிட விரும்புவோம்.
அந்த வகையில் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு Potato Garlic Rings எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை - ½ கப்
- உருளைக்கிழங்கு - 2
- சோள மாவு - 2 மேசைக்கரண்டி
- பூண்டு - 5
- சில்லி ஃப்ளேக்ஸ்- 1 மேசைக்கரண்டி
- சாட் மசாலா - ¼ மேசைக்கரண்டி
- வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
பூண்டு, கொத்தமல்லியை போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்வதுடன் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி, நீர் சேர்க்காமல் மசித்து கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் ரவையை போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்க்க வேண்டும். வெண்ணெய் உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு, பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்க வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு 5 நிமிடம் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
5 நிமிடத்திற்கு பிறகு, அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, சோள மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சோள மாவுடன் கலந்த உருண்டைகளை டம்ளரை பயன்படுத்தி ரிங்க்ஸ் வடிவில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். சூடானதும் வடிவமைத்த ரிங்க்ஸ்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொறிக்க வேண்டும்.
தற்போது சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் Potato Garlic Rings தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |