மூட்டு வலிக்கு முடிவு கட்டும் மூலிகை டீ
தற்போது வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் கூட மூட்டு வலி பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூட்டு வலிக்கு உணவில் போதியளவு கால்சியம் மற்றும் வைட்டமின் கே இல்லாததால் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
இவற்றை தாண்டி விழுந்த காயங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு, விளையாட்டு மோசமான உட்காரும் தோரணை மற்றும் சில மருத்துவ நிலைகள் உள்ளிட்ட காரணங்களாலும் மூட்டுவலி ஏற்படலாம்.
அந்த வகையில் சில மூலிகைப் பொருட்களை தண்ணீரில் கலந்து டீயாக குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சினை நாளடைவில் குறையும்.
அப்படி மூட்டுவலி பிரச்சினையை குறைக்கும் மூலிகை டீ எவ்வாறு செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மூலிகை டீ
தேவையான பொருட்கள்
- இஞ்சி- ஒரு ஸ்பூன் (துருவியது)
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- கருப்பு மிளகு- ஒரு சிட்டிகை
- தேன் - ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் அதில் இஞ்சி, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
குடிக்கும் சமயத்தில் மிளகு, தேன் கலந்து விட்ட குடிக்கவும்.
இந்த டீயை ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |