உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இரண்டு பொருட்கள் கலந்த தேநீரை குடிச்சா போதுமாம்...!
தமிழரின் பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சமையலறையில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவும்.
மேலும், இது அனைத்து வயதினருக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது.மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த மசாலாப் பொருட்களால் பானங்களைத் தயாரித்துக் குடிப்பதே உங்கள் உடலுக்கு சிறந்தது.
பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வழங்குகிறது என்பதை பற்றி காணலாம்.
உங்களுக்கு தேவையான பொருட்கள்
- தண்ணீர் 1 கப்
- பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி
- சீரகம் 1/2 தேக்கரண்டி
- இஞ்சி 1/2 அங்குலம்
- சுவைக்கேற்ப தேன்
பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேயிலை செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். இப்போது, அதில் பெருஞ்சீரகம், சீரகம், இஞ்சி சேர்க்கவும். பின்னர், மூடி 8-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், உங்கள் பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீரின் சுவைக்கு ஏற்ப தேனுடன் கலந்துகொள்ளுங்கள். இப்போது சூடான சுவையான தேநீர் தயார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
பெருஞ்சீரகத்தின் நன்மைகள்
பெருஞ்சீரகம் விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது ஃப்ரீ ரேடிகல்ஸ் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும். பெருஞ்சீரகம் விதைகளில் ஆண்டிமைக்ரோபியல் கூறுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. அவை குளிர், இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தைத் தணிக்கவும் உடனடி நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.
பெருஞ்சீரக தேநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இது வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
பெருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.