நீரிழிவு நோயை அலற விடும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை! மூன்றே பொருட்களில் தயாரிக்கலாம்... எப்படி தெரியுமா?
குழந்தைகளுக்கு மாலைநேரத்தில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை செய்து கொடுக்கலாம்.
இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
- தேங்காய் துருவல் - அரை கப்
- பொடித்த வெல்லம் - 200 கிராம்
- முந்திரி பருப்பு - 5 (பொடிக்கவும்)
- மில்க்மெய்டு - 2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் தேங்காய் துருவலை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலை சீவி விட்டு இட்லி தட்டில் வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
அதனுடன் வெல்லம், முந்திரி பருப்பு, மில்க்மெய்டு ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அதனை தேங்காய் துருவலில் புரட்டி சுவைக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா?
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் GI அளவு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆகவே சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஏற்ற வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதிலும் இது உதவும்.
இவற்றில் அதிக நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்களும் தனது தினசரி உணவுத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
குறைந்த GI இருந்தால், அந்த உணவு உடனடியாக சிதைத்து செரிக்கப்படாது, அதாவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை உடனடியாக அதிகரிக்காது.
மொத்தத்தில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும் எனலாம்.
எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுத்திட்டம் மிகவும் முக்கியம்.