வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்காதீங்க... பலரும் அறியாத வாஸ்து டிப்ஸ்
நாம் வீடுகளில் காலியாக சில பொருட்களை வைத்தால் எதிர்மறை விடயங்கள் நடைபெற்று அமைதியின்மையை ஏற்படுத்துமாம்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்தால் தான் நிதி நலனையும் மேம்படுத்துவதுடன், குடும்பத்தில் அமைதியும் ஏற்படும். இவ்வாறு நேர்மறையான சூழலை பராமரிக்க வீட்டில் ஒரு போதும் காலியாக வைக்கக்கூடாத சில பொருட்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பணப்பை:
வீட்டில் வெறும் பணப்பையை வைத்தால் இவை நிதி உறுதியற்ற தன்மையைக் குறிப்பதுடன், பணப்புழக்கத்தில் வெற்றிடத்தையும் உருவாக்குகின்றது என்று நம்பப்படுகின்றது. நீங்கள் பணப்பையை காலியாக வைத்தால் நிதி மிகுதியின் பற்றாக்குறையைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.
ஜாடிகள்
வீட்டில் வெற்று கொள்கலன்கள் மற்றும் ஜாடிகள் என்பது சாதாரண பொருட்கள் இல்லையாம். இவையும் ஏராளமான நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வருகின்றது. குறித்த ஜாடி வெறுமையாக இருந்தால், நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை சீர்குலைக்கும். ஆதலால் ஜாடிகளை வெற்று ஜாடியாக வைக்காமல் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகமாகும் என்றும் கூறப்படுகின்றது.
வெற்று மலர் குவளைகள்:
அதே போன்று வீட்டை அலங்கரிக்கும் பூ ஜாடி வெற்றிடமாக இருக்கக்கூடாதாம். அதாவது மலர் குவளை அழகை மட்டுமின்றி உறவுகள்,இணைப்புகளின் மலர்ச்சியையும் குறிக்கின்றதாம். காலியாக இருந்தால் வீட்டிற்குள் நிறைவேறாத உறவுகள், வெறுமையின் உணர்வையும் குறிக்கின்றதாம்.
குளியலறையில் காலி வாளி
குளியலறை என்பது செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமான நீர் வெளியேறும் இடமாகக் கருதப்படுகிறது. குளியலறையில் ஒரு வெற்று வாளி வீட்டின் செழிப்பிற்கு இடையூறாக காணப்படுகின்றது. குளியலறையில் நிரப்பப்பட்ட வாளியை வைப்பதன் மூலம், நேர்மறை ஆற்றல் தடைபடாமல், வீடு முழுவதும் சுதந்திரமாக தொடர்ந்து பரவுவதை உறுதி செய்வதாக நம்பப்படுகிறது.
வெற்று நீர் பாத்திரம்:
இதே போன்று காலி நீர் பாத்திரம் வெறுமையை குறிப்பதுடன், நேர்மறை ஆற்றல் ஓட்டத்தையும் சீர்குலைக்கின்றது. ஒரு நல்ல ஆற்றல் ஓட்டத்தை பராமரிக்க, வாஸ்து நீர் பாத்திரங்களை தண்ணீரில் நிரப்ப பரிந்துரைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |