90's கிட்ஸ்களின் பேவரைட் பொரி உருண்டை! வீட்டிலேயே செய்யலாம்
90's கிட்ஸ்களின் பேவரைட்டில் நிச்சயமாக பொரி உருண்டைக்கு இடமுண்டு, கிராமத்து பெட்டி கடைகளை அலங்கரிக்கும் பொரி உருண்டையை ருசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.
அப்படி ரசித்து ருசித்து சாப்பிட்ட பொரி உருண்டையை மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பொரி- 4 கப்
வெல்லம்- 1 கப்
நெய்- 2 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்- சிறிதளவு
செய்முறை
ஒரு கப் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும், இதனை வடிகட்டிக் கொண்டு 2 டீஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பாகு காய்ச்சவும்.
கெட்டியாக வந்தவுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பொரியை கொட்டி கலந்து விடவும், கையில் அரிசி மாவு தேய்த்துக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அவ்வளவு தான், பொரி உருண்டை தயார்!!!