viral video: முள்ளம்பன்றியை வேட்டையாடிய சிறுத்தை... இறுதியில் என்ன ஆச்சின்னு பாருங்க
முள்ளம்பன்றியை அசுர வேகத்தில் பாய்ந்து வேட்டையாடிய சிறுத்தையின் பதற வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், ஊசி முனை போன்ற நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட பயங்கரமான உடல் அமைப்பை கொண்டிருக்கும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. இவற்றின் ஒவ்வொரு முள்ளும் கறுப்பு மற்றும் கபில நிறத்தில் காணப்படும்.
இம்முட்கள் நீளத்தில் வித்தியாசமானவையாக இருக்கும். கழுத்திலும், தோள் பகுதியிலும் உள்ள முட்களே நீளத்தில் சற்று நெடியவையாக இருக்கும்.
இவை 15 முதல் 30 செ.மீற்றர் வரை நீண்டிருக்கலாம். வாலைப் போர்த்தியுள்ள முட்கள் குட்டையானவையாகவும், வெண்ணிறமாகவும் இருக்கும். இவை எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
இம்முட்களினால் எழுப்பப்படும் கிலுகிலுப்பை ஒலி எதிரிகளை எச்சரிப்பதற்கு உதவுகின்றன. இவற்றை எந்த விலங்கு தாக்கினாலும் அதற்கும் பாதிப்பு ஏற்படும்.
காரணம் இதன் நெடிய முள்கள் வேட்டை விலங்குகளின் உடலையும் குத்தி கிழிக்கும் தன்மை கொண்டவை.
இந்நிலையில் முள்ளம்பன்றியை அசுர வேகத்தில் பாய்ந்து வேட்டையாடிய சிறுத்தைக்கு இறுதியில் என்ன நிகழ்ந்தது என்பதை காண்பிக்கும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |