திரைக்கு தயாராகும் ‘போராட்டம்’ - படக்குழு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
ஈழத் திரையுலகில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் திரையிடப்படவுள்ளது.
விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இலங்கையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈழத் திரையுலகில் இதுவரை பேசப்படாத பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையிலும் ‘போராட்டம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள், படக்குழுவினர் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் திரைப்படம் உருவான விதம் தொடர்பான பல்வேறு பின்னணித் தகவல்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
‘போராட்டம்’ திரைப்படம் தொடர்பான இந்த முக்கியமான பின்னணித் தகவல்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |