போராட்டம் படத்தின் புதிய பாடல் வெளியீடு... இணையத்தில் கவனம் ஈர்க்கு “வீரனே வா” பாடல்!
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “போராட்டம்” திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “வீரனே வா” இன்று (26) அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்தப் பாடல் தற்போது அனைத்து இசைத் தளங்களிலும் மற்றும் இணைய வழித் தளங்களிலும் ரசிகர்களின் பார்வைக்கும் கேட்பிற்கும் வெளியாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக உணர்வுகளையும், மனித வாழ்வின் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் “போராட்டம்” திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தின் முந்தைய பாடல்கள் மற்றும் வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு இலங்கையின் முன்னணி பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |