பாரதியார் முகத்தை பச்சை குத்தியுள்ள பூர்ணிமா ரவி : ரசிகர்களின் கருத்து
பிக்பாஸ் 7 போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா ரவி, சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற ஒரு நடிகை. அவர் பச்சை குத்துவதில் ஈடுபாடு கொண்டவர்.
மற்ற பிக்பாஸ் தமிழ் நடிகைகளான ரக்சிதா மகாலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா துதா ஆகியோரும் பச்சை குத்தியுள்ளனர். பூர்ணிமா ரவி, பாரதியார் முகத்தை பச்சைக்குத்தியுள்ளதால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
ரசிகர்கள் கருத்து
பாரதியார் பெண் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த தமிழ் புலவர் மற்றும் சமூக சீர்திருத்தம் பெண் உரிமை ஆகியவற்றுக்கான தனது சக்திவாய்ந்மத கவிதையால் புரட்சி செய்தவர். பாரதியார் மீது ஈடுபாடு கொண்டவர்களின் குணமும் அவரை பின்பற்றுவதாக இருக்கும் என்று ஒரு கருத்து காணப்படுகின்றது.
பாரதியாரை உடம்பில் பச்சை குத்துவது சிலருக்கு, தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பாரதியார் செய்த சேவைக்கு மரியாதை செய்யும் ஒரு அடையாளமாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் பூர்ணிமா ரவி கையில் இருக்கும் பாரதியார் முகமும் இவரின் தமிழ் பற்றை பரைசாற்றுவதாக இருக்கலாம். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |