பாக்கியராஜ் வீட்டில் விஷேசம்.. போஸ்ட் போட்டு மகனை வாழ்த்திய பூர்ணிமா
பாக்கியராஜ் வீட்டில் நேற்றைய தினம் நடந்து முடிந்த கொண்டாட்டத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ். இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.
இதற்கிடையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த நடிகை பூர்ணிமாவை பாக்யராஜ், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு பாக்கியராஜ் என்ற மகனும் இருக்கிறார்.
திருமண நாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், சாந்தனு - தொகுப்பாளினி கீர்த்தனா இருவரும் நேற்றைய தினம் தன்னுடைய 10 ஆவது வருட திருமண நாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டியுள்ளனர்.
சாந்தனு - கீர்த்தனா பற்றிய சர்ச்சையான செய்திகள் அதிகமாக வந்தாலும், அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கும் தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மகன்- மருமகளின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பூர்ணிமா பாக்கியராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |