நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ? பூர்ணிமாவின் பேச்சால் கோபத்தில் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட நிலையில், வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் செயல்கள் பார்வையாளர்களை அதிர்ச்சி அளிக்கின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நிற்கின்றனர். இதனால் ரசிகர்களின் ஆதரவு விசித்ரா மற்றும் அர்ச்சனாவிற்கு அதிகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் இரட்டை அர்த்தத்தில் ஆண்களிடம் பேசிவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
வைல்டு கார்டு போட்டியாளரில் ஒருவரான பிராவோவிடம் பூர்ணிமா, நைட்டுக்கு மாயா வேணுமா என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பிராவோ சட்டென்று இல்லைங்க என்று பதில் கூறுகின்றார்.
இதையடுத்து ‘அது என்ன நைட்டுக்கு’ என்று மாயா கேட்க பூர்ணிமா வேறொரு அர்த்தத்தில் சிரிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளனர்.
இதனை கமல்ஹாசன் கேட்டு ரெட் கார்டு கொடுக்கமாட்டாரா? என்று கொந்தளித்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |