அதிக எண்ணெய் உறிஞ்சாமல் புசு புசுன்னு பூரி சுடுவது எப்படின்னு தெரியுமா? எளிய வழிகள்!
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளின் பட்டியலில் பூரி நிச்சயம் இடம்பிடித்துவிடும்.
ஆனால் பூரி அதிக எண்ணெய் உறுஞ்சுவதால், குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் எண்ணெய் அதிகம் உறிஞ்சப்படாத வயைில் எப்படி பூரி சுடலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிய வழிகள்
பூரிக்கு மா பிசையும்போது, காய்ந்த மாவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பிசைவதால், இது பூரிகளை மென்மையாக்குகிறது, அத்துடன் வறுக்கும்போது அவை வெடிக்காது, இதனால் குறைந்த எண்ணெயில் சுவையான பூரி சுட முடியும்.
அதுமட்டுமன்றி பூரிக்கு மாவை பிசையும்போது, மாவு மிகவும் ஈரமாக இல்லாமல் பார்த்துக் கொள்வதால். பூரிகள் எண்ணெய் பாத்திரத்தில் போட்ட பிறகு வெடிக்காது, அத்துடன் அவை அதிக எண்ணெய் உறிஞ்சுவதும் தடுக்கப்படும்.
மாவைப் பிசைந்த பிறகு, உடனடியாக பூரிகளைச் செய்ய ஆரம்பித்துவிட கூடாது. காரணம் இது பூரிகளை உருட்டி வறுக்கும்போது கிழிக்கக்கூடும். இதனால், பூரிகளை பொரிக்கும் எண்ணெய் அவற்றில் நிரம்பத் ஆரம்பிக்கின்றது.
எனவே மாவைப் பிசைந்த பின்னர், சிறிது நேரம் மூடி வைத்து, ஊறவிட வேண்டியது அவசியம். பூரி செய்த பின்னர். அது வெடிக்காது, எண்ணெய்யும் அதிகம் இழுக்காது.
பூரிகளை உருட்டும்போது, உலர்ந்த மாவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் இது பூரிகளை வெடிக்கச் செய்து எண்ணெய் அவற்றை நிரப்பக்கூடும்.
மாவு பயன்படுத்தாமல் பூரிகளை உருட்டுவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் உலர்ந்த மாவுக்கு பதிலாக எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
மேலும் பூரிகளை உருட்டும்போது எண்ணெயை பயன்படுத்துவதால் பூரிகள் மென்மையாகின்றன, அவை கிழிந்து போகாமலும் எண்ணெய் நிரம்பாபமலும் இருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
