பூனம் பாண்டே செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்... வழக்கு பதிவு செய்ய கோரிக்கை!
நடிகை பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாக, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரப்பிய வதந்திக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் காரசாரமான எதிர்புகள் வந்த நிலையில் தற்போது இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகை பூனம் பாண்டே
கடந்த 2013 ம் ஆண்டு ஹிந்தி படமான ‘நாஷா’ படத்தின் மூலம் திரையுரகில் அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேக்கு தற்போது 32 வயதாகின்றது.
‘லாக் அப்’எனும் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர் 2020 ஆம் ஆண்டு தனது சாம் பாம்பே என்பவரை காதலித்து கரம்பிடித்தார்.
தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இணையத்தில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் இறந்து விட்டதாக தகவல் ஒன்று வெளியானது.
இப்பதிவு பூனம் பாண்டேவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இப்பதிவின் உண்மை நிலை குறித்தும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால் அவரின் இறப்பை வட இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. ஊடகத்திடம் பேசிய பூனம் பாண்டே மேலாளர், ”புற்றுநோய் இருந்தது உண்மைதான். உ.பி.யில் பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் இறுதிசடங்குகள் நடக்கும்” என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என்று பகீர் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “நான் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறுதான். ஆனால், அதன் நோக்கம் இந்த செய்தியை கேட்டதும் பலரும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றி பேசினோம் இல்லையா? இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவி்த்தார்.
மற்ற புற்றுநோய் போல இது உங்களின் உயிரை அவ்வளவு சீக்கிரம் எடுத்துவிடாது. இதனை சரியான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். அதனால், இதுபற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் பூனம்.
இதையடுத்து, மரணம் என்ற உணர்ச்சிபூர்வமான விடயத்தை விளையாட்டாக கூறியமைக்கு, பூனம் பாண்டேவுக்கு எதிராக கண்டணங்கள் வலுத்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான சத்யஜித் தம்பே பூனம் பாண்டேவின் இந்த நாடகம் பொதுமக்களிடையே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே அவர் மீது மும்பை போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்யஜித் தம்பே புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |