கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகை பூஜா ஹெக்டே பட்டு சேலையை அணிந்து செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பூஜா ஹெக்டே
தெலுங்கில் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே.
இவர் தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும் பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தன் பின்னர் தான் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தெலங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வகையில் இருந்தது.
இந்த பாடலின் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார். நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
சூர்யாவோடு, ரெட்ரோ படம். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான கூலி படத்தில் ஒரு நடனத்தில் பங்கேற்பதுடன், கேமியோ கதாபாத்திரமாகவும் பூஜா ஹெக்டே வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஊதா நிற பட்டுசேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் பூஜா ஹெக்டேவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |