அம்மாவான பின்னும் குறையாத அழகுடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங்கான உடையில் தனது கணவருடன் வெளிநாட்டில் சுற்றிதிரியும் அழகிய புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஸ்ரீதேவி விஜயகுமார்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
அதனை தொடர்ந்து காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்னரே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தேவதையை கண்டேன் திரைப்படம் இவருக்கு பெரிய புகழை தேடிக்கொடுத்தது. சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் தற்போது 38 வயதாகும் இவர் சில நடின நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார். அம்மாவான பின்பும் கூட அதே இளமை பொலியுடன் அப்படியே இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகைளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
