சோழர்களுக்கு ஜாலியாக எச்சரிக்கை விடும் பாண்டியர்கள்! பொன்னியின் செல்வனின் எதிரொலி - வைரல் பேனர்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு அந்த திரைப்படத்திற்கு மதுரை ரசிகர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
இது நகைச்சுவையான ஒரு எச்சரிக்கை என்றாலும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்க நினைத்து தற்போது முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
ரைட்டு ???? pic.twitter.com/IxuULt5aUo
— James Stanly (@JamesStanly) September 30, 2022
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு எதிராக பாண்டிய நாட்டில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை பற்றிய திரைப்படம் ஆகும்.
இதனால் பாண்டிய நாடாக உள்ள மதுரையில் பகை மறவா பாண்டியர்களின் வாரிசுகள் என்று பெரிய அளவு பேனர் அடிக்கப்பட்டுள்ளது.
ஜாலியாக எச்சரிக்கை
மிகவும் நகைச்சுவை கலந்த எச்சரிக்கையாக இந்த பேனர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் உள்ளே வாசகத்தில் “ பாண்டிய நாட்டிற்கு வந்தோமா, மதுரை மீனாட்சியை கும்பிட்டோமா, தியேட்டரில் படத்தை ஓட்டினோமா, பரோட்டா சாப்பிட்டோமா என்று இருக்கவேண்டும்.
இல்லையென்றால் அவ்ளோதான் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தற்போது படம் வெளியாகி உள்ளதை முன்னிட்டு வைரலாகிவருகிறது.