பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை காட்சி எங்கு எடுக்கப்பட்டது தெரியுமா? லீக்கான ருசிகர தகவல்
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' கதையை எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம்.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.
இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இலங்கை தொடர்பான காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டது என்ற ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் படமாக்கப்பட்ட இலங்கை காட்சிகள்
பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள் எல்லாம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.
யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி சவாரி செய்யும் காட்சி, ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிடவைகள் தாய்லாந்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.


