தீபாவளிக்கு விற்பனைக்கு வந்த பொன்னியின் செல்வன் சேலை! விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்க உருவான படம் பொன்னியின் செல்வன்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றிநடைபோட்டுவரும் நிலையில் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் சேலை
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது.
பொதுவாக பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த சேலைகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் சேலை தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ளது, இதில் நடிகர்களின் படங்கள் மற்றும் வாள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் டிரெண்டாகி வரும் இந்த சேலையின் விலை ரூ.2100 (இந்திய மதிப்பின் படி) என கூறப்படுகிறது.