மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படுகின்றீர்களா? பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்
பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி எடுத்துக்கொண்டால் என்னென்ன நன்மைகளை நாம் பெறுகின்றோம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கீரை செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது.
மேலும் இரும்புச்சத்து நிறைந்துள்ள இந்த கீரை ரத்த சோகையை குறைக்கவும் உதவுகின்றது.
வயதான தோற்றத்தை முன்கூட்டியே தடுக்கவும் உதவிசெய்வதுடன், இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும் பொன்னாங்கண்ணி கீரை பயன்படுகின்றது.
பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் புரை மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
பொன்னாங்கண்ணி கீரை மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதுடன், மாதவிடாய் பிரச்சினை சீராக்கவும், அதனால் ஏற்படும் வலி மற்றும் அளெகரியத்தை குறைக்கவும் செய்கின்றது.
மேலும் சிறுநீரக கற்களை கரைக்கவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை தடுக்கவும் உதவுவதுடன், மன அழுத்தம் பதற்றத்தை குறைக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |