மாதுளம்பழம் சாப்பிட்டு மயங்கிய ஒன்றரை வயது குழந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம் என்றாலும், சில தருணங்களில் உயிர் பலியையும் ஏற்படுத்துகின்றது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா அனீஸ், பாத்திமா என்ற தம்பதியினிரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத்.
குழந்தைக்கு மாதுளம் பழத்தினை சாப்பிட கொடுத்துள்ள நிலையில், சாப்பிட்ட குழந்தை திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கியுள்ளது. மயங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.