அடடா... தினமும் மாதுளைப் பழ ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமாம்!
பழங்களில் அனைத்து பழங்களும் நமக்கு நன்மை தரக்கூடிய பழங்கள்தான். ஆனால், அதை விட மாதுளைப் பழத்திற்கு இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதன் வண்ணமும், சுவையும் நம்மை சாப்பிட தூண்டும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய 3 வகை சுவைகளை கொண்டது.
சரி... தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு பார்ப்போம் -
புற்று நோய்க்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், மாதுளையில் அந்தோசயனின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால், இவை நம் உடலை புற்றுநோய்யிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்திவிடும்.
நீர்ச்சத்துக்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கான ஊட்டச்சத்தை கொடுக்கும். மேலும், நம் உடலிலிருந்து நன்றாக நீரேற்றேற்றவும் உதவி செய்யும்.
சர்க்கரை நோய்க்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். மேலும், டைப்-2 வகையான சர்க்கரை நோய்களின் அறிகுறிகளை தடுத்து விடும்.
சருமத்திற்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், சருமம் பொலிவுடன் மின்னும். மேலும், முதுமை வராமல் இளமையோடு வைத்திருக்க உதவி செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கிவிடும்.
பற்களுக்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், பற்களை வலிமையாக வைத்துக்கொள்ள உதவி செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு
தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும், இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளும்.