விஷப் பொடி தூவி கொத்துக் கொத்தாக காகங்களை கொன்ற நபர்.. - அதிர்ச்சி சம்பவம்...!
பொள்ளாச்சி அருகே விஷம் கலந்த பொடியை தூவி காகங்களை கொன்ற நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விஷப் பொடியை தூவி காகங்களை கொன்ற நபர்
பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூரில் தனியார் விவசாய தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்துள்ளது. இறந்து விழுந்த காகங்கள் சிறிது நேரம் பிறகு காணாமல் போயுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நாகராஜ் என்பவர் விவசாய தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை ஒரு சாக்கு பையில் போட்டு நிரப்பிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அந்த நபரை பொதுமக்கள் துரத்தி மடக்கிப் பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சூர்யா (37) என்பது தெரியவந்ததும். வெண்படை நோயை குணப்படுத்துவதற்காகவும், மருந்து தயாரிக்கவும், விஷம் கலந்த பொடியை தூவி காகங்களை கொன்றதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.