8 மாதங்களில் 46 கிலோ எடை குறைத்த பொலிஸ் அதிகாரி
இந்தியாவின் புதுடெல்லியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஜிதேந்திரா மணி என்பவர் எட்டு மாதங்களில் 46 கிலோ கிராம் உடல் எடையை குறைத்துள்ளார்.
இவ்வாறு உடல் எடை குறைக்கப்பட்ட ஜிதேன்றாவுக்கு டெல்லி போலீஸ் ஆணையாளர் சஞ்சய் அரோரா வாழ்த்துக்களை தெரிவித்து கௌரவித்துள்ளார்.
ஒரு நோக்கத்திற்காக போராடினால் அதில் வெற்றி அடைய முடியும் என்ற வாக்கினை மெய்யப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் கருதப்படுகின்றது.
டெல்லி மெட்ரோ பகுதிக்கான பிரதி காவல்துறை ஆணையாளராக கடமை ஆற்றி வரும் ஜிதேந்திரா 130 கிலோ கிராம் உடல் எடையை கொண்டிருந்தார்.
இதனால் அவர குருதி அழுத்தம் அதிக அளவிலான கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வந்தார்.
இதனை புரிந்து கொண்ட ஜிதேந்திரா தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தீர்மானித்தார்.
இதன் அடிப்படையில் கடந்த எட்டு மாத காலப்பகுதியில் அவர் சுமார் 46 கிலோ கிராம் அளவில் உடல் எடையை குறைத்துள்ளார்.
46 அங்குலங்களாக காணப்பட்ட அவரது இடுப்பின் அளவு தற்போது 34 அங்குலமாக குறைந்துள்ளது.
இவ்வாறு உடல் எடையை குறைத்ததன் காரணமாக அவரது கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையின் அளவு மருந்து மாத்திரைகள் எதுவும் இன்றியே குணமாகி உள்ளது.
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் சோறு அல்லது சப்பாத்தி உண்பதனை முற்று முழுதாக தவிர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு 15 ஆயிரம் அடி நடை பயணம் மேற்கொண்ட அவர் மா பொருள் அற்ற உணவுப் பொருட்களை உட்கொண்டதுடன் பாகற்காய் ஜூஸ் அதிக அளவில் உட்கொண்டுள்ளார்.
ஆப்பிள், பப்பாளி, கிவி மற்றும் கொய்யா போன்ற பழங்களை அவர் உட்கொண்டுள்ளார்.
பகல் அல்லது இரவு உணவு வேலைகளுக்கு முன்னதாக சாலட் வகைகள் அல்லது தேங்காய் தண்ணீர் போன்ற பான வகைகளை அவர் உட்கொண்டுள்ளார்.
பகல் உணவாக பச்சை இலை காய்கறிகளை அதிக அளவில் உட்கொண்டுள்ளார் சிற்றுண்டியாக தானிய வகைகளை அவர் உட்கொண்டார், இரவு உணவாக மரக்கறி சூப் அல்லது சில்லி பன்னீர் உட்கொண்டுள்ளார்.
இவ்வாறு உடல் எடையை மிக வேகமாக குறைத்துக் கொண்டமைக்காக ஜிதென்றாவுக்கு காவல்துறையினர் பாராட்டி கௌரவித்துள்ளனர்