17 வயது பெண்ணின் வீட்டிற்கு சத்தமின்றி நுழைந்த பொலிஸ்காரர்: பின்பு நடந்த துயரம்
பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது பெண்ணை பொலிசார் ஒருவர் வன்கொடுமை செய்துள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் தனது பெற்றோருடன் 17 வயது பெண் பெண் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மீது பல நாட்கள் அவரை அடைவதற்கு முயற்சித்த நிலையில், குறித்த பெண்ணும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி பெண்ணின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், அக்கம் பக்கம் அவதானித்த பொலிஸ்காரர் பெண்ணின் வீட்டில் நுழைந்து அவரை வன்கொடுமை செய்துள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் மீது காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டதுடன், வேலையிலிருந்தும் இடைநீக்கம் செய்துள்ளனர்.