22 கி.மீ லாரியை துரத்தி பிடித்த போலீஸ்! வீடியோ வெளியாகி வைரல்!…
ஐந்து நபர்கள் லாரியில் மாடுகளை திருடி கொண்டு தப்பித்துச் செல்லும்போது,குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் பிடித்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருட்டு, கொள்ளை அதை தொடர்ந்து துரத்தல் காட்சிகள் பொதுவாக திரைப்படங்களில்தான் பார்த்திருப்போம்.
ஆனால், டெல்லி அருகே உள்ள குர்கிராமில்(Gurugram.) 5 கொள்ளையர்களை சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் பிடித்துள்ளனர்.
ஐந்து நபர்கள் லாரியில் மாடுகளை திருடி கொண்டு தப்பித்துச் செல்லும்போது, குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் பிடித்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஐந்து திருடர்கள் ஒரு லாரியில் மாடுகளை ஏற்றுகின்றர். இதையறிந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர்.
இதனை அவதானித்த திருடர்கள் வாகனத்தை மேலும் வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அவர்களிடம் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.
இருப்பினும், போலீசார் வருவதை கவனித்த குற்றவாளிகள், ஓடும் வாகனத்தில் இருந்து மாடுகளை கீழே தள்ளிவிட்டனர்.
டெல்லி எல்லையில் இருந்து குர்கிராமுக்கு வந்து கொண்டிருந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது கொள்ளையர்கள் வேகமாக ஓடிவிட்டனர்.
அவர்களை துரத்திச் சென்ற போலீசார், இறுதியில், போலீசார் கொள்ளையர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா அரசு பசுக் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது மற்றும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு ஆணையத்தையும் அமைத்துள்ளது.
இருந்தபோதிலும், மாநிலத்தில் பசுக் கடத்தல் அதிகரித்து வருகிறது.
ஓட்டையில் சிக்கிக் கொண்ட திருடன்… ஆங்கிலத்தில் பொளந்து கட்டிய பள்ளி சிறுவன்