கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை ரகுல்- ஜாக்கி திருமணம்.., வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் அருண்விஜய் நடித்த தடையற்க தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு முன்னணி நடிகர்கரான கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.
அந்தவகையில், ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருக்கும் ஜாக்கி பாக்னானியை காதலித்து வந்த நிலையில் இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி கோவாவில் ITC Grand South Goa ஹொட்டலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானினிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Thankyou so much Honorable Prime Minister @narendramodi ji. Your blessings mean a lot to us ???? @jackkybhagnani pic.twitter.com/Ymq7jENvUi
— Rakul Singh (@Rakulpreet) February 22, 2024
அந்த கடிதத்தில், " திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் திருமணத்தின் நல்ல சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் நன்றி தெரிவித்து X பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |