play store ல் உள்ள virus ஐ கண்டுபிடிக்க எளிய வழி என்ன தெரியுமா? r நீங்களும் ஆக்டிவ் பண்ணிக்கோங்க..
பொதுவாக தற்போது இருக்கும் எல்லோர் கையிலும் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும். அதிலுள்ள ஆப்கள் சில அப்டேட் ஆகாமலும் அல்லது அதிலுள்ள சில முறைமைகளை மாற்றாமலும் இருப்போம்.
இதனால் தமது போன்களில் இருக்கும் புதிய விடயங்கள் நமக்கு தெரியாமலே போய்விடும். ஸ்மார்ட் போன்களில் தரத்திற்கேற்ப அவைகளின் அப்டேட்கள் மாறுபட்டு கொண்டே இருக்கும்.
அதனை நாம் அப்டேட்கள் வரவர தமது போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் போன்கள் தாமதமாக வேலை செய்யும் அல்லது சில போன்கள் வேலை செய்யாமல் நிற்கும்.
அந்த வகையில் நாம் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ஆப்களை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுத்தும் Play store ல் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். ஆனால் இந்த விடயம் பெரியதாக யாரும் செய்வதில்லை.
அந்த மாற்றங்களை எவ்வாறு செய்துக் கொள்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
முறைமையை செயல்படுத்த வழிகள்
1. படிமுறை
Play Store > ஆப்பிலிருக்கும் Logo-வை கிளிக் செய்து > click the Settigns > Parental control என்று இருக்கும் அதனை 0n செய்து > Code register செய்ய வேண்டும்.
2. படிமுறை
apps & games கிளிக் செய்து உள்ளே செல்லும் போது அதில் 3 வயது, 7 வயது, 12 வாய்த்தது, 16 வயது, 18 வயது என வயதெல்லை வரும். > click the 7+ > Save
3.படிமுறை
Play store -க்கு சென்று . > click the Loga > Play product > Scan என்பதை கிளிக் செய்து Scan செய்யவும்.
4..படிமுறை
click the Setting option > scan apps with play product, improve harmful app detection ஆகிய இரண்டையும் (0n) செய்யவும்.
முக்கிய குறிப்பு
உங்களுடைய ஸ்மார்ட் போன்களில் இதனை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் ஆப்பில் virus இருந்தால் Notification ஆக வரும்.