Plastic Currency: இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக Polymer பிளாஸ்டிக் வகை நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
இதற்காக உலகளாவிய நிறுவனங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம், அதாவது நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட்டு முத்ரான் பிரைவேட் லிமிடெட், பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கான பிரத்யேக பாலிமர் சப்ஸ்ட்ரேட் தாள்களை வழங்க டெண்டர் கோரியுள்ளது.

கடுமையான நிபந்தனைகள்
டெண்டரில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
* சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எந்தவொரு வணிகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
* மூலப்பொருட்களையும் இந்த நாடுகளில் இருந்து பெறக்கூடாது.
* சீனா மற்றும் பாகிஸ்தானில் பணியாற்றிய ஊழியர்கள் இந்த திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது.

பிளாஸ்டிக் நோட்டுகள் எதற்காக?
யுபிஐ போன்ற டிஜிட்டர் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும் பணத்தின் தேவையும் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
எளிதில் கிழியாது, நீண்ட காலம் உழைக்கக்கூடியது, தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் சேதமடையாது.
மிக முக்கியமாக ஈரப்பதம் மற்றும் பக்டீரியாக்களை உறிஞ்சாது என்பதால் சுத்தமாக இருக்கும்.
ஆண்டுதோறும் அச்சடிப்பு செலவு குறைவதுடன், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
அடுத்த ஆண்டு சோதனை ஓட்டம் தொடங்கும் நிலையில் மக்களின் வரவேற்பை பொறுத்து 2027ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அனைத்து நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
