பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துபவரா நீங்கள்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர்
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் தண்ணீர் அருந்துவதற்கு பிளாஸ்டிக் போத்தலையே பயன்படுத்தி வருகின்றனர்.
அலுமினியம், சில்வர், காப்பர் போன்ற உலோகப் பொருட்களை விட பிளாஸ்டிக் விலை மலிவாக இருப்பதால் இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் பாட்டில்களை வெப்பமான அல்லது குளிரான இடங்களில் வைக்கும் போது, இதிலுள்ள மைக்ரோ ப்ளாஸ்டிக் தண்ணீருடன் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரை அருந்துவதால் இதய பிரச்சினைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல உடல்நல ஆபத்துகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறைந்த ரத்த அழுத்தம்
சமீபத்தில் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் ரத்த நாளங்களில் கலப்பதாகவும் இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்தவ ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே முடிந்தளவு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |