மாசற்ற செடிகளுக்கு நடுவில் இந்த செடி இருந்தாலே போதும்.. பலன் நிச்சயம்
பொதுவாக சில வீடுகளில் வீட்டின் அழகிற்காகவும் வாஸ்த்திற்காகவும் செடிகள் வளர்ப்பார்கள்.
உலக சுகாதார அமைப்பின் (WHO)படி, உலகளவில் சுமார் 4.3 பேர் உட்புற காற்றின் தரம் குறைவால் இறக்கின்றனர்.
வீட்டின் உள்ளே இருக்கின்ற காற்று மாசடைவதற்கு பல்வேறுப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இதனை நாம் கண்டுக்கொள்ளாத போது அவை நமது உடலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் அளவிற்கு அதிகமான ஈரப்பதம், குளிரூட்டும் அமைப்புகள், ஈரப்பதமூட்டும் சாதனங்கள் அல்லது பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளிட்டவைகளிலிருந்து வெளியாகும் காற்று, உள்ளே இருக்கும் காற்றின் தரத்தை குறைக்கிறது.
இப்படியான பிரச்சினைகளை தடுப்பதற்காகவே சிலர் தாவரங்களை உள்ளே வளர்க்கிறார்கள். இது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இதனால் சுத்தமான காற்று வீட்டின் உள்ளேயும் கிடைக்கும்.
அந்த வகையில் வீட்டிலுள்ளே சுத்தமான காற்றை என்னென்ன தாவரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் காற்று மாசுப்படும் சந்தர்ப்பங்கள்
[7EQ86J
- கார்பெட்களில் இருந்து வெளியாகும் காற்று.
- ஃபார்மால்டிஹைடு, டிடர்ஜன்ட்களிலிருந்து வரும் காற்று.
- பென்சீன், பெயிண்ட்கள், ஃபர்னிச்சர் மெழுகுவர்த்தி பாவணை.
- வாசனை திரவியங்கள் மூலம் வெளியாகும் கரிம சேர்மங்கள்
- ஹேர் ஸ்ப்ரேக்கள், ஏர் ஃப்ரெஷ்னர்கள்
- தூசி மற்றும் பூஞ்சைகளிலிருந்து வெளியாகும் உயிரியல் மாசுக்கள்.
மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலிருந்து வெளியாகும் காற்றினால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் தாவரங்கள் பற்றி பார்க்கலாம்.
1. கற்றாழை செடி
வீட்டில் வளர்க்கக் கூடிய தாவரங்களில் ஒன்று தான் கற்றாழை. இது காற்றிலிருந்து வெளியாகும் அசுத்தமான காற்றை தூய்மைப்படுத்துகின்றது.
கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இது மனிதர்களின் சுவாசத்திற்கு சிறந்தது. இதனால் சிலர் கற்றாழை செடியை வீட்டின் வரவேற்பறை அல்லது பெட்ரூம்களில் வைத்து வளர்ப்பார்கள்.
2. பாம்பு செடி
சூழலை மாசுப்படுத்தும் காற்றை உறிஞ்சிக் கொண்டு சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.
இதன்படி, ஃபார்மால்டிஹைட், சைலீன், டோலுயீன் மற்றும் பென்சீன் ஆகியவை உறிஞ்சப்படுகிறது. காற்றினால் பரவும் பொடுகு, அழற்சி, சுவாச பிரச்சினை போன்றவற்றின் தாக்கத்தை குறைக்கிறது.
3. வார்னே டிராகேனா
காற்று சுத்திகரிக்கும் தாவரங்களில் வார்னே டிராகேனா தாவரமும் ஒன்று. இந்த தாவரம் ஹேர்ஸ்ப்ரே மற்றும் பர்னிச்சர் வார்னிஷ் உள்ளிட்டவைகளில் காணப்படும் சைலீன் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற நச்சுகளை காற்றிலிருந்து வெளியேற்றுகிறது.
மேலும், வார்னே டிராகேனா தாவரத்தை வீட்டில் வளர்க்கும் பொழுது சுயமரியாதை அதிகரிப்பு, மேம்பட்ட மனநிலை மற்றும் நல்வாழ்வு உணர்வு போன்ற உளவியல் பலன்களையும் தருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |