இலங்கை - யாழ்ப்பாணத்தில் அழகு கொஞ்சும் சில இடங்கள்.. கண்டிப்பாக போய் பாருங்க!
பொதுவாக இலங்கை எனும் கூறும் போது ஞாபகத்திற்கு வருவது சுற்றுலா தான்.
இங்கு இயற்கை வனப்புமிக்க பல இடங்கள் இருக்கின்றன. இதனை பார்க்க வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சுற்றிப் பார்ப்பதற்கு என ஏகப்பட்ட இடங்கள் காணப்படுகின்றன.
ஈடுபடுகளுடன் சேர்ந்த தமிழர்களின் கலையம்சங்கள் காணப்படுவதால் வெளிநாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றார்கள்.
அத்துடன் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் இங்கு அதிகமாக வருகை தருவார்கள். ஏனெனின் தமிழர்கள் வாழ்ந்த எச்ச சான்று காணப்படுகின்றன.
இதன்படி, இலங்கை - யாழ்ப்பாணம் சென்றால் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. யாழ்ப்பாண இராச்சிய இடிபாடுகள்
இந்த இடமானது சங்கிலியன் தோப்பு யாழ்ப்பாணத்தின் பழங்கால கோட்டையின் நுழைவாயிலாக இருக்கின்றது. இங்கு சங்கிலியன் ராஜாவின் சின்னங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்த ஈடுபாடுகள் இலங்கை வரலாற்றை ஒற்றை வரியில் கூறும். வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசைப்படும் பயணிகளுக்கு இது ஏற்ற இடமாக இருக்கின்றது.
2. கீரிமலை புனித நீர் ஊற்று
இந்த மலையானது இயற்கை எழிலுடன் கூடிய நாகுலேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ளன. ஊற்றுகள் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றார்கள்.
இதனை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் காலை வரை காத்திருந்து வருகை தருவார்கள். கடலுடன் சேர்ந்தாற் போல் காணப்பட்டாலும் நன்னீராக இருக்கும்.
3. மருதனமடம் ஆஞ்சநேயர் கோவில்
தமிழர்கள் பகுதி என்றாலே அதிகமான கோயில்கள், வரலாற்று சின்னங்கள் காணப்படும். பௌத்தர்கள் வாழும் இலங்கை நாட்டில் தமிழர்களின் அங்கிகாரங்களை காட்டும் எச்சங்களாக இந்த இடங்கள் இருக்கின்றன.
இந்த கோயிலானது, யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை வழியில் மருதனமடம் சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள மருதன மடம் ஆஞ்சநேயர் கோவில் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |