சூரிய அஸ்தமனத்தை கண்ணில் பார்க்காத இடங்கள்.. அப்போ பகல் மட்டும் தானா?
பொதுவாக சூரியன் காலை உதித்து மாலையில் மறைவது தான் வழக்கம்.
ஆனால் இது பூமியில் சில இடங்களில் மாற்றி நடக்கின்றது. சூரியன் உதியத்தை பார்க்கும் இந்த நாடுகள் சூரியன் அஸ்தமனத்தை பார்ப்பது குறைவாக இருக்கின்றது.
அப்போது இங்குள்ள மக்கள் எந்த நேரத்தில் தூங்குகிறார்கள் என்றால் அது சந்தேகம் தான்.
அந்த வகையில், ஸ்வீடனின் வடகோடி கிருணா நகரமானது சுமாராக 19000 மக்கள் தொகை கொண்டுள்ளது.
அத்துடன் இந்த நகரத்தின் சிறப்பு என்னவென்றால் இங்கு மே முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு சூரியன் மறையாமல் இருக்குமாம்.
இதனை தொடர்ந்து இந்த நகரத்தில் கிருனாவின் ஆர்ட் நோவியோ என்ற தேவாலயம் உள்ளது. இது அதிகமான சுற்றுலா பயணிகளை தன்வசப்படுத்துகின்றது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது போன்று அஸ்மனத்தை பார்க்காத நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சூரியனை பார்க்காத நாடுகள்
1. ஐஸ்லாந்து
இந்த நாடு அரோராவுக்கு பெயர் போனது. ஆனால் இங்கு கொசுக்கள் இல்லை என ஆய்வுகள் கூறியுள்ளது. மேலும் கொசுக்கள் இல்லாத மாலையை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இங்கு தாராளமாக செல்லாம். ஜூன் மாதத்தில் மாலையே இருக்காது எனவும் கூறப்படுகின்றது.
2. நோர்வே
நள்ளிரவு நேரத்தில் “சூரியனின் நிலம்” என இந்த நாடு அழைக்கப்படுகின்றது. புவிகோளத்தின் அமைப்பின் பிரகாரம் நோர்வே வடகோளத்தில் இருக்கின்றது.
இதன் காரணமாக இரவு என்பது இங்கு இல்லாமலேயே இருக்கின்றது. அந்த வகையில் மே முதல் ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் தொடர்ந்து ஒளிரும்.
3. நுனாவுட்
இந்த இடமானது கனடா 3000 மக்களைக் கொண்ட நகரம் மற்றும் ஆர்க்டிக் வட்டத்திலிருந்து இரண்டு டிகிரி கீழே அமைந்துள்ளது.இங்கும் சூரியன் மறைவதில்லை.
இருப்பினும் குளிர்காலத்தில் இந்த இடம் தொடர்ந்து 30 நாட்கள் இருள் சூழ்ந்திருக்கும். அத்துடன் டொராண்டோவிற்கு அடுத்தபடியாக கனடாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |