என்னங்க சொல்றீங்க! இந்தியாவுல இந்த மாதிரி இடங்கள் கூட இருக்கா?
பொதுவாக தற்போது இருக்கும் நாகரீகம் எவ்வளவு வளர்ச்சியடைந்திருந்தாலும் இயற்கையை அவனால் உருவாக்க முடியாது.
அந்தளவு பிரமிக்க வைக்கும் இறைவனின் படைப்பு.
மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமிடுகள், கோயில்களை கண்டு மனிதர்கள் வியந்து போனாலும் இயற்கையாகவே படைக்கப்பட்ட இடங்களை பார்க்கும் பொழுது இன்னும் வாயடைச்சி போய் விடுவார்கள்.
சமீபக்காலமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. ஏனெனின் இயற்கை வனப்பு மிக்க இடங்கள் இது போன்ற நாடுகளில் தான் அதிகமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு நாம் பார்க்க தவறிய சில இடங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் நாம் பார்க்க மறந்த இடங்கள்
1. ரான் ஆப் கட்ச்
குஜராத் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி இருக்கும் இந்த பாலைவனம் மனிதர்கள் வாழும் தன்மையற்ற உப்பு தளமாக பார்க்கப்படுகின்றது.
இந்த இடத்திற்கும் மாவீரன் அலெசாண்டரின் படைகளுக்கும் சில குறிப்புகள் பாடப்புத்தகங்களில் இருக்கின்றன.
ஆர்டிக் பனிப்பிரதேசங்களில் நிகழ்வது போன்ற ஒளி மாயாஜாலம் இங்கும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது.
அத்துடன் இந்த இடத்தில் ஆட்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் அமானுஷ்ய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்படுகின்றது.
2. சிரபுஞ்சி
இந்தியாவின் தென் கிழக்கு மாநிலமான சிரபுஞ்சி உலகத்திலே அதிகம் மழை பெய்யும் இடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஒரு வருடத்தில் சராசரியாக இங்கு 425 செண்டி மீட்டர் மழைப்பெய்யும் என வானிலை அறிக்கை இருக்கின்றது. உலகத்திலுள்ள இடங்களில் அதிகளவு பசுமை கொண்ட இடமாக இது பார்க்கப்படுகின்றது.
ஒரு விதமான சொதசொதப்புடனே காணப்படும் இந்த இடத்திற்கு முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். ஏனென்றால் இது மாதிரி ஒரு இடம் உலகத்தில் வேறெங்குமே இல்லை. சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும்.
ஏனெினன் இங்கு அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் அத்துடன் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இங்கு இருக்கின்றன. இயற்கை விரும்பிகள் இங்கு அதிகமாக வருகை தருகிறார்கள்.
3. லாடாக்
லாடா என அழைப்படும் இடமானது மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது. அத்துடன் இங்கு காந்த மலைகள்.
கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன. ஆய்வாளர்களின் கணிப்பின் பிரகாரம் இங்கு புவியிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக கூறுகின்றார்கள்.
இதன் காரணமாக இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்தில் பறக்கும்.
சுற்றுலா செல்லும் போது இது போன்று வித்தியாசமான இடங்களை சென்று பாருங்கள். விமானங்கள் செல்லும் போது புவியீர்ப்பு சக்தியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் விமானம் விபத்துக்குள்ளாகலாம்.