உலகில் விமானங்கள் பறக்க முடியாத இடங்கள் - இதில் இந்தியாவும் இருக்கா?
உலகில் விமான போக்குரத்து முற்றிலும் இல்லாத சில இடங்களும் உள்ளன. அதன் உண்மையான விளக்கம் பற்றி பதிவில் பார்க்கலாம்.
விமானம் போக்குவரத்து இல்லாத இடங்கள்
தற்போது விமான போக்குவரத்து இல்லாத இடங்கள் பார்ப்பது அரிது. உலகில் எந்த மூலையில் இருக்கும் நாடுகளுக்கும் நம்மால் நினைத்தால் சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்களுக்குள் செல்ல முடியும்.
அந்த அளவிற்கு தொழில்நுட்பமும், விமானப் போக்குவரத்தும் இப்போது வளர்ந்து விட்டது. உலகையே விமானத்தில் நாம் சுற்றினாலும் இப்போதும் விமானம் பறக்க முடியாத சில தடைசெய்யப்பட்ட இடங்கள் உள்ளன .
ஆனால் இது பலருக்கும் தெரியாத ஒரு விடயம். உலத்தில் 100 சதவீதத்தில் 75 சதவீதமான இடங்களில் விமான போக்குவரத்து தான் அனைத்து வேலைகளையும் இலகுவாக்கிறது.
ஆனாலும் சில இடங்களில் விமான போக்குவரத்து இல்லை. இதற்கு அந்த இடங்களின் புவியியல் அமைப்பு, கலாச்சர முக்கியத்துவம் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன.
இந்த பதிவில் உலகின் எந்தெந்த பகுதிகளின் மீது விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

டிஸ்னி
பூங்காக்கள் உலகில் பல அதிசயங்கள் நிறைந்த தீம் பார்க் என்றால் அது டிஸ்னி பூங்காக்கள்தான். ஆனாலும், விமானங்கள் பறக்கும் போது ஜன்னல் வழியாக அந்த மாயாஜால கோட்டைகளின் அழகை மேலிருந்து காண யாராலும் பார்க்க முடியாது. அறிக்கைகளின்படி, 9/11 சம்பவத்திற்குப் பிறகு, டிஸ்னி பூங்காக்கள் உட்பட பல சுற்றுலாத் தலங்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து வருகின்றது. கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் அல்லது புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டின் 3000 அடி சுற்றளவிற்குள் எந்த விமானமும் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது ஒரு தற்காலிகத் தடையாக இருந்தபோதிலும், 2003-ஆம் ஆண்டு முதல் இந்த விதி நிரந்தரமாக்கப்பட்டது.
திபெத்
திபெத் உலகின் மிக உயரமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பகுதியின் சராசரி உயரம் சுமார் 16,000 அடியாகும். இதனால்அதன் எல்லைகளுக்குள் அமைந்துள்ள உயரமான மலைகள் போன்ற பல்வேறு காரணிகளால், இது இயற்கையாகவே விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட உலகின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான வணிக விமானங்கள் மலைகளுக்கு மேலே பறக்க முடிந்தாலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக பயணிகள் விமானம் பொதுவாக அப்பகுதியில் உள்ள உயரமான மலைகளைத் தவிர்த்துச் செல்கின்றன.
மச்சு பிச்சு
இந்த இடத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும், இங்கு மட்டுமே வளரக்கூடிய அரிய வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அறிக்கைகளின்படி, இந்த பிராந்தியத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை முடிந்தவரை மாசுபாட்டிலிருந்து தூய்மையாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின்படி, ஒரு விமானம் இங்கே பறக்கும் போது அவசரமாக தரையிறங்க நினைத்லோ அல்லது விபத்துக்குள்ளானாலோ அது அந்த இடத்தில் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் எனபதே இங்கு விமானம் தடை செய்யப்பட்ட காரணம்.
மக்கா
இது உலகின் மிகவும் முக்கியமான மத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும், மேலும் மக்கா, குறிப்பாக புனித காபாவின் மீது எந்தப் பயணிகள் விமானமும் பறக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஹஜ் யாத்திரையின் இறுதி இலக்காகவும் இஸ்லாமிய நம்பிக்கையின் மையமாகவும் புகழ்பெற்ற இந்த இடத்தின் மீது பயணிகள் அல்லது விமானிகள் பறந்தால், அவர்கள் கடுமையான விளைவுகளையும், மிகப்பெரிய அபராதங்களையும் சந்திக்க நேரிடும்.
தாஜ்
மஹால் உலக காதலர்களின் சின்னமான தாஜ் மஹால் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மிக அழகான கட்டிடக்கலைப் படைப்புகளில் ஒன்றாகும். 1632 முதல் 1653 வரை கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ அங்கீகரித்து, 1983 ஆம் ஆண்டில் இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. இந்த அழகான கட்டுமானத்தையும், இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையையும் பாதுகாக்கும் நோக்குடன், இந்திய அரசாங்கம் 2006 ஆம் ஆண்டில் இப்பகுதியில் விமானம் பறக்கத் தடை விதித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |