இறந்தது போல் நடித்து எதிரிகளை ஏமாற்றும் விலங்குகள் எவை தெரியுமா?
தனக்கென்று ஆபத்து வரம் நேரத்தில் இறந்துபோல நடித்து மற்றவர்களை ஏமாற்றும் விலங்குகள் பற்றி தெரியுமா அதை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
இறந்தது போல நடித்து ஏமாற்றும் விலங்குகள்
ஒவ்வொரு விலங்குகளும் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தங்களை விட பலம் வாய்ந்த எதிரி விலங்குகளிடம் தாங்கள் இறந்தது போல நடிக்கும்.
ஒப்போசம் என்கிற கங்காரு இனத்தை சேர்ந்த விலங்கு 'இறந்தது போல நடிப்பதில்' உலகப் புகழ்பெற்றவை. எதிரிகளைக் கண்டால் அப்படியே தரையில் விழுந்து, வாயைத் திறந்து, கண்கள் நிலைகுத்திப் போய் அப்படியே செத்தது போலவே இருக்கும்.
இது தவிர இறந்த உடலில் வீசும் ஒருவித துர்நாற்றத்தையும் வீசும், இதனால் வேட்டையாடும் விலங்குகள் இது அழுகிய உடல் என்று நினைத்து விட்டுச் சென்றுவிடும்.
இதுபோல இன்னும் பல விலங்குகள் தங்களை இறந்து போல காட்டி தப்பிக்கும். அந்த விலங்குகள் பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம்.

விலங்குகளின் பெயர்
ஈஸ்டர்ன் ஹாக்-நோஸ் பாம்பு (Eastern Hognose Snake): இந்தப் பாம்புகள் ஆபத்தை உணர்ந்தால் மல்லாக்கப் படுத்து, நாக்கை வெளியே தள்ளி செத்தது போலக் கிடக்கும். தனனை தாக்க வந்த எதிரி அந்த இடத்தில் இல்லாமல் அங்கிருந்து செல்லும் வரை இந்த பாம்புகள் அப்படியே இருக்கும்.
சிச்லிட் மீன் (Livingston’s Cichlid): மற்ற விலங்குகள் தப்பிக்க நடிக்கும், ஆனால் இந்த மீன் வேட்டையாடுவதற்காக இறந்தது போல நடிக்கும். ஏரியின் அடியில் செத்த மீன் போல அசையாமல் கிடந்து, அதைத் தின்ன வரும் சிறிய மீன்களைத் திடீரெனப் பிடிப்பதற்கு இந்த மின் செத்தது போல நடிக்கும்.
வாத்துகள் (Ducks): சில வகை வாத்துகள் ஆபத்தான நேரத்தில் உடல் முழுவதையும் விறைப்பாக மாற்றிக்கொண்டு செத்தது போலக் கிடக்கும். எதிரி கவனக்குறைவாக இருக்கும்போது சட்டென்று பறந்துவிடும்.

மழைக்கால தவளைகள் (Fire-bellied Toads): இவை ஆபத்து வரும்போது தங்கள் வயிற்றுப் பகுதியை மேல்நோக்கித் திருப்பி, அசையாமல் கிடக்கும். இவற்றின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் பிரகாசமான நிறங்கள், இவை விஷத்தன்மை கொண்டவை என்ற எச்சரிக்கையை வேட்டையாடும் விலங்குகளுக்குத் தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |