உலகில் மரணமே இல்லாத இடம் எங்குள்ளது தெரியுமா?
உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம்.
இறப்பே இல்லாத நகரம் எங்குள்ளது
உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணி காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்டு.
இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன.
இங்கு அதிக குளிர் காரணமாக நிலம் எப்போதும் உறைந்த நிலையில் தான் இருக்குமாம். இதன் காரணமாக தான் இங்கு யாரும் இறக்க அனுமதிப்பதில்லை என ப்படுகின்றது.

இதனால், புதைக்கப்படும் உடல்கள் பல ஆண்டுகள் ஆனாலும் அழுகுவதில்லை. 1918-ம் ஆண்டு 'ஸ்பானிஷ் ஃபுளு' நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை 1990-களில் ஆய்வு செய்தபோது, அந்த வைரஸ் இன்னும் அந்த உடல்களில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
இது மீண்டும் பரவக்கூடும் என்பதால், இங்கு இறப்பது 1950-களிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யாராவது இறக்கும் நிலையில் இருந்தால், அவர்கள் உடனடியாக விமானம் மூலம் நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் எனப்படுகின்றது.
இதேபோன்று இங்குள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கான வசதிகள் இல்லை. அதற்கு அவசர கால அறுவை சிகிச்சைகள் அல்லது சிக்கலான பிரசவங்களைக் கையாளும் அளவுக்கு இங்கு மருத்துவ வசதி இல்லை.

அதனால் கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் பிரசவத் தேதிக்கு சில வாரங்களுக்கு முன்பே நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்குசெல்ல வேண்டும் எனப்பட்டுள்ளது.
உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு நீங்கள் விசா இல்லாமல் வசிக்கலாம் மற்றும் வேலை செய்யலாம். 1920-ல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இதில் கையெழுத்திட்ட நாடுகளின் குடிமக்கள் (இந்தியாவும் அடங்கியுள்ளது) இங்கு வந்து தங்குவதற்கு விசா தேவையில்லை.
ஆனால் உங்களுக்கு அங்கு ஒரு வேலை இருக்க வேண்டும் மற்றும் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும். உங்களிடம் பணம் இல்லையென்றால், அதிகாரிகள் உங்களை வெளியேற்ற வாய்ப்புள்ளது எனப்பட்டுள்ளது. .தன்படி இங்கு இறப்புக்கள் பல வருடமாக இல்லாத காரணம் இதுவே.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |