பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள்? இதோ அதிர்ச்சி காட்சி
பீட்சா டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் ஆர்டர் வந்த பீட்சாவில் ஒரே ஒரு துண்டை மட்டும் எடுத்து சாப்பிட்டுவிட்டு செய்த திருடத்தனம் காணொளியாக வெளியாகியுள்ளது.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பீட்சா இருக்கின்றது. இவை உடம்பிற்கு அதிக கெடுதியை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தும் இதன் சுவை யாராலும் சாப்பிடாமல் இருக்கமுடியவில்லை.
மேலும் நமக்கு தேவையான சாப்பாடு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடுவதால், அவை வீடு தேடியும் வந்துவிடுகின்றது.
ஆனால் நாம் ஆர்டர் செய்யும் உணவுப்பொருட்கள் எவ்வாறு வருகின்றது என்பது தெரியாமல் பலரும் சாப்பிட்டு வருகின்றனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் காட்சியே இதுவாகும்.
பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் ஆர்டர் எடுத்து வரும் வழியில் வாடிக்கையாளரின் பீட்சாவை பிரித்து அதிலிருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்டதன் அடையாளமே தெரியாத அளவில் மீண்டும் பேக் செய்துள்ளார்.
— Out of Context Human Race (@NoContextHumans) June 27, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |