கடலில் தென்பட்ட பிங்க் நிற டால்பின் உண்மையா அல்லது போலியா? வைரலாகும் புகைப்படங்கள்!
வட கரோலினா கடற்கரையில் மிகவும் அரிதான இளஞ்சிவப்பு நிற டால்பின் மீன்களை கண்டதாக இணையத்தில் அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படங்களை பார்த்த பலரும், இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் இல்லையென்றும், அடிக்கடி இந்தக் கடற்கரைப் பகுதியில் இதுபோல் இளஞ்சிவப்பு நிற டால்பின் மீன்களை பார்க்க முடியும் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர் .
இது ஒரு பாட்டில்நோஸ் டால்பின், இது அல்பினோவாக இருக்கும்போது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கலாம் ஆனால் இந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்காது.
இந்த படம் வெறும் போட்டோஷாப் செய்யப்பட்டது. இது ஒரு AI படம் அல்ல என்பதை தெளிவுபடுத்துவது முக்கியம், ஏனெனில் இது உண்மையல்ல, ஆனால் AI மிகவும் உண்மையானது போல் தோற்றமளிக்கும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதை கவனமாக பார்க்கும் போது பிளாஸ்டிக் போல் காணப்படுகின்றது. நிச்சயம் இதை செயற்கை நுண்ணறிவு மூலமே உருவாக்கியுள்ளார்கள் என ஒருவர் உறுதியாக கூறுகிறார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணைத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
A rare pink Dolphin. ? pic.twitter.com/KTxpezbOqA
— Figen (@TheFigen_) June 19, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |