அன்னாசி பழத்தில் கேசரி செய்து சாப்பிடதுண்டா? சுவையோ அபாரம்
அன்னாசி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சீ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
அன்னாசிப் பழமானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, காயங்களை குணமாக்குகிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது, எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
இவ்வாறு அதிகமான நன்மைகளை கொண்டுள்ள அன்னாசியைக் கொண்டு எவ்வாறு கேசரி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அன்னாசி (சிறியதாக நறுக்கியது) - 1 கப்
- ரவை - 1 கப்
- சீனி - 1 1/2 கப்
- முந்திரி - 10
- உலர்ந்த திராட்சை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - சிறிதளவு
- மஞ்சள் நிறப் பொடி - தேவையேற்படின்
- நெய் - 1/2 கப்
- எண்ணெய் - 1/3கப்
(எண்ணெய், நெய் இரண்டையும் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்).
செய்முறை
நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பேனில் கலந்து வைத்துள்ள எண்ணெயையும் நெய்யையும் 3 மேசைக்கரண்டி அளவு ஊற்ற வேண்டும்.
பின்பு ஒன்றிரண்டாக உடைத்து வைத்த முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும். பின்னர் அதனுடன் உலர்ந்த திராட்சையை சேர்க்க வேண்டும்.
திராட்சை சற்று பெரிதாக வந்தவுடன் அதை வெளியில் எடுத்துவிட்டு வெட்டி வைத்துள்ள அன்னாசியை அதே நெய்யில் சேர்த்து 4 - 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
பின்னர் அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி, அது சூடானதும் அதில் ரவையை சேர்த்து மணல் மணலாய் வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு கொதிக்க வைத்துள்ள அன்னாசியையும் தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் அதிலிருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றியதன் பின்னர் எடுத்து வைத்திருக்கும் சீனியையும் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இறுதியாக தேவையேற்படின் மஞ்சள் நிறப் பொடியை சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர் கலந்து வைத்திருக்கும் எண்ணெயையும் நெய்யையும் 4 மேசைக்கரண்டி அதன் மீது சேர்க்க வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடி குறைவான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சை, சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும், சூப்பரான அன்னாசி கேசரி ரெடி!