தேனுடன் நெய் கலந்து முகத்தில் தடவுங்க... முகப்பரு தொல்லையே இருக்காதாம்
முகப்பரு பிரச்சனைக்கு தேன் மற்றும் நெய்யை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முகப்பரு
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் சருமப்பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு ஆகும்.
இதற்கு பல வீட்டு வைத்தியங்களை நாம் முயற்சித்தாலும், நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் இருக்கும். ஆனால் நெய் முகப்பருவிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
நெய் ஏன் சிறந்த தீர்வு?
நெய் சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளதுடன் இது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகவும் இருக்கின்றது.
வைட்டமின் ஈ சருமத்தினை புத்துணச்சியுடன் வைக்கின்றது, இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது.
ஏனெனில் முகப்பரு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பாக்டீரியா தொற்றாகும்.
நெய் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது வறண்ட சருமத்தால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, முகப்பரு தழும்புகளைக் குறைக்கக்கூடும்.
தேவையான பொருட்கள்
நெய்: 1 தேக்கரண்டி
தேன்: 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
செய்முறை
கிண்ணம் ஒன்றில் நெய், தேன், மஞ்சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் மென்மையான பேஸ்ட் போன்ற கலவையை உருவாக்கவும்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில், குறிப்பாக முகப்பரு உள்ள பகுதிகளில், ஃபேஸ் பேக்காகப் பூசவும்.
20 நிமிடங்கள் கழித்து, சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும். இந்த பேக்கைப் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
சிறந்த முடிவுகளுக்கு, இரவு தூங்குவதற்கு முன் இதைச் செய்யலாம். சருமத்தில் பயன்படுத்தும் முன்பு கையில் சிறிய இடத்தில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
