நீங்கள் செய்யும் இந்த தவறுகள் முகப்பருவிற்கு முக்கிய காரணம்! என்னென்னனு தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலத்தில் பெண்களின் அழகிற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருவது அவர்கள் முகத்தில் வரும் முகப்பருக்கள் தான்.
இதற்கு அவர்களின் உணவுப்பழக்கங்கள் மாறுபட்டிருந்தாலும், மேலும் நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகளும் இருதற்கான காரணங்களாக அமைகின்றது.
அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இருந்தாலும், மேலும் சில காரணங்கள் முகப்பருக்களுக்கு முக்கியப்பிரச்சினையாக இருக்கின்றது.
மெத்தை உறை
மெத்தை உறை, தலையணை உறை இவர்களை சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் தலையணை உறையில் இருக்கும் வியர்வை, பொடுகு இவை மட்டுமின்றி, முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் சேர்ந்து முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றது.
மொபைல் போன்
முகத்தில் இருக்கும் வியர்வை, எண்ணெய், அழுக்குகளுடன் நாம் மொபைல் போனை பயன்படுத்துகிறோம். ஆனால் முகத்தினை சுத்தம் செய்யும் நாம் மொபைலை சுத்தம் செய்வதில்லை. ஆதலால் மொபைலில் இருக்கும் தூசுகூட நமக்கு முகத்தில் பருக்களை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றது.
துண்டு
நீங்கள் பயன்படுத்தும் துண்டை வெயிலில் போட்டு காய வைப்பதற்கு மறந்துவிடாதீர்கள். மேலும் உங்களது துண்டுகளை வேறு ஒருவர் பயன்படுத்தினாலே, அல்லது அவை அசுத்தமாக இருந்தாலும் உங்களது முகத்தில் பருக்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றது.