37 ஆயிரம் அடி பறந்த விமானத்தில் உறங்கிய பைலட்கள்... பின் நடந்த பரபரப்பு சம்பவம்
பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் விமானிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நக ரத்திற்கு போயிங் 37 விமானம் பறந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து செல்கையில், விமானத்தை இயக்கும் விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையின் மூலம் விமானத்தை செட் செய்துவிட்டு உறங்கியுள்ளனர்.
உறங்கிய விமானிகள்

இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதையறிந்த போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்துள்ளது.

நடவடிக்கை
அதன் பின் கண் விழித்த விமானிகள் விமானத்தை தரையிறக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து அந்த இரு விமானிகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர் அதிகாரிகள். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        