பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்த நபரின் இதயத்தில் புதிய வைரஸ் - பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
பன்றியின் இதயம் பொறுத்தப்பட்டு காப்பாற்ற நபர் ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னர் அவர் இதயத்தை தற்போது சோதனை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரை சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் என்ற நபர் இதயத்துடிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்பின்னர், செயற்கை சுவாசமாக பன்றியின் இதயத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்திருந்தனர். ஆனால், திடீரேன சில நாட்களுக்கு முன் டேவிட் பென்னட் காலமானார்.
சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்...திடீரென்று கண்விழித்த சடலம்! அலண்டு ஓடிய உறவுகள்
வைரஸால் உயிரிழப்பு

அவரது உடல் நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, டேவிட் பென்னட் இறப்புக்கான காரணத்தை அறிய அவரது இதயத்தை சோதனை செய்துள்ளனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டேவிட் பென்னட்-க்கு பொருத்தப்பட்ட இதயத்திற்குள் டிஎனே போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இவை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால், புதிய தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பாதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.