அரிய வகை பன்றி முக தவளைகள்
பன்றி முக தவளைகள் மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
பன்றி முக தவளைகள்
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய உயிரினம் ஊதா தவளை.
இந்த தவளையின் மூக்கு பன்றியின் முகம் போல கூர்மையாக இருப்பதால், இது பன்றி முக தவளை என்றும் அழைக்கப்படுகிறது.

தடித்த உடலமைப்பைக் கொண்ட இந்த தவளைகள், டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தவளைகள் தங்களது வாழ்நாளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான நேரத்தை பூமிக்கடியில் சுமார் 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்தில் கழிக்கின்றன.
ஆண்டுக்கு சுமார் 2 வாரங்கள் மட்டுமே, பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வருகின்றன.
தமிழக அரசு திட்டம்
காடுகள் அழிப்பு மற்றும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தவளைகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த அரிய வகை தவளைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த தவளைகள் தற்போது எங்கு வாழ்கின்றன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மேலும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அழியும் நிலையில் உள்ள அரிய உயிரினங்களின் பாதுகாப்புப் பட்டியலில் இந்த தவளைகளையும் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.