படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தை! கவனித்து சொல்லுங்க கண்டுபிடிக்க முடிகிறதா?
இன்றைய காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் மிகவும் குறைந்தே காணப்படுகின்றனர். தங்களுக்குத் தேவையானதை இணையத்தின் மூலம் கண்டுபிடித்து விடுகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாகப் பகிரப்படும் மர்மப் படங்கள், மூளையை கசக்க வைக்கின்றன. இந்தப் படங்களின் புதிர்களில் மறைந்திருக்கும் ரகசியங்களைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல.
கூர்மையான மனமும் கண்களும் உள்ளவர்களும் கூட சில சமயம் திணருகிறார்கள். எனினும், படத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்களை நிமிடங்களில் தீர்த்து வைக்கும் சிலரும் உள்ளனர்.
இப்போது இங்கே உள்ள படப் புதிர் உங்கள் மனதையும் உங்கள் கண்களையும் சோதிக்கும். காட்டில் எடுக்கப்ப்பட்ட இந்த படத்தில், ஒளிந்து கொண்டிருக்கும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்பதை பாருங்கள்.
ஒரு வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? இந்த ஒரே ஒரு டீ போதும்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் இரண்டு மூன்று பெரிய மரங்கள் தெரியும். சுற்றிலும் சிறிய மரங்களும் புதர்களும் காணப்படுகின்றன. ஆனால் இந்த படத்தில் ஒரு ஆபத்தான சிறுத்தைப்புலியும் மறைந்துள்ளது. அதன் இயல்புக்கு ஏற்ப இரை தேடி வருகிறது.
இந்த புகைப்படத்தை மக்கள் பலமுறை பார்த்தும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. சரி வாருங்கள் படத்தில் இருக்கும் ஆபத்தான சிறுத்தைப்புலி எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.
முதலில், படத்தில் ஒரு தடித்த மற்றும் பெரிய மரத்தைப் பார்ப்பீர்கள். வேரை நோக்கி அந்த மரத்தின் வலது பக்கம் பாருங்கள். சிறுத்தை இரை தேடி அங்கு மறைந்துள்ளது.
நீங்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என்றால், நாங்கள் அதை வட்டத்தின் உதவியுடன் காண்பிக்கிறோம்.