ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட ரித்திகா, தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
சின்னதிரைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிரபல்யமானவர் ரித்திகா.
இதனை தொடர்ந்து இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார், இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இவருக்கு பாரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் ரித்திகா, தன்னுடன் ஒரே தொலைக்காட்சியில் பணிபுரியும் டெக்னீசியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இதனையடுத்து மிகவும் எளிமையான முறையில் சென்னையில் ரிசப்ஷன் வைத்தார். இதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இப்படியான நிலையில் தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கிறார்.
தொடர்ந்து இவரின் மாலைத்தீவு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.